இந்தியா

போலீசை அறைந்தார் பாஜக எம்எல்ஏ

Rasus

உத்தரபிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவர், போக்குவரத்து போலீசாரை அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.யில் போக்குவரத்து போலீசாக பணிபுரிவர் அமித் ஷரின். விதான் பவன் பகுதியில் நேற்று மாலை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக போக்குவரத்து விதிமுறையை மதிக்காமல், ஒரு வழிப்பாதையில் செல்ல வாகனம் ஒன்று முயற்சித்திருக்கிறது. உடனே அந்த வாகனத்தை அமித் ஷரின் தடுத்திருக்கிறார். இது ஒரு வழிப்பாதை. மாற்றுப் பாதையில் செல்லுங்கள் என சொல்லியிருக்கிறார். ஆனால் வண்டியில் வந்தவர் பாஜக எம்எல்ஏ, ஸ்ரீராம் சோன்கர். ’நான் எம்எல்ஏ. மாற்றுப்பாதையில் போகமுடியாது’ என மறுத்திருக்கிறார். இதனையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் எம்எல்ஏ, அந்த போக்குவரத்து போலீசாரை அறைந்ததுடன் தவறுதலாகவும் பேசியுள்ளார். இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக போலீசார், ஸ்ரீராம் சோன்கரின் பாதுகாப்பு அதிகாரியை கைது செய்துள்ளனர். மேலும் அமித் ஷரினிடம் தவறுதலாக நடந்து கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் போலீசாரிடம் கொடுக்கப்பட்ட புகாரில் எம்எல்ஏ-வின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.