இந்தியா

மீண்டும் உயர்ந்த சமையல் சிலிண்டரின் விலை

jagadeesh

சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 6 மாதங்களில் 290 ரூபாய் 50 காசு அதிகரித்துள்ளது. இன்று மட்டும் ரூ. 147
உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 590 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. அடுத்து
வந்த செப்டம்பர் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 606 ரூபாய் 50 காசாகவும், அக்டோபர் மாதத்தில் 620
ரூபாயாகவும், நவம்பர் மாதத்தில் 696 ரூபாயாகவும் ஏற்றம் கண்டது.

தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் மானியம் இல்லாத சிலிண்டர் ஒன்றின் விலை 714 ரூபாயாகவும், ஜனவரி மாதத்தில் 734 ரூபாயாகவும் அதிகரித்தது.
இந்நிலையில், இன்று அதன் விலை 147 ரூபாய் விலை அதிகரித்து 881 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.