கனமழை எச்சரிக்கை pt web
இந்தியா

"2 தினங்களுக்கு மிககனமழை.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்தப் பகுதி" வானிலை ஆய்வு மையம் அப்டேட்

நவம்பர் 22ஆம் தேதி வங்ககடலில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Vaijayanthi S

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது; இதில் நவம்பர் 22ஆம் தேதி வங்ககடலில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..

மழை

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்றும் நாளையும் என 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதில் சென்னை உட்பட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்புள்ளது எனவும் தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கும் கல்லூரிக்கும் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டது..

இந்நிலையில் பிற்பகல் நிலவரப்படி, தமிழகத்தில் நவம்பர் 22ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று வங்கக் கடலில் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. நவம்பர் 22 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் அதன் பிறகு, அது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் அறிவித்துள்ளது..

மழை

மேலும் இதன் எதிரொலியாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..