இந்தியா

லாரிகள் வேலை நிறுத்தம்: சென்னையில் காய்கறிகள் விலை ஏற்றம்

லாரிகள் வேலை நிறுத்தம்: சென்னையில் காய்கறிகள் விலை ஏற்றம்

webteam

லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் தேசிய அளவிலான வர்த்தகத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி வரி மற்றும் தினசரி டீசல் விலை நிர்ணய முறையை திரும்ப பெற வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் இன்று இரண்டாவது நாளாக நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் 40 லட்சம் லாரிகளும்,‌ தமிழகத்தில் இரண்டரை லட்சம் லாரிகளும் இயங்கவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் 200 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தேசிய அளவிலும் வர்த்தக மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.