இந்தியா

லோக்பாலை தற்போதைக்கு அமைக்க முடியாது: மத்திய அரசு

லோக்பாலை தற்போதைக்கு அமைக்க முடியாது: மத்திய அரசு

Rasus

லோக்பால் அமைப்பை தற்போதைக்கு அமைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, லோக்பால் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெற வேண்டியிருப்பதையும், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலியாக இருப்பதையும் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் குறித்த சட்ட மசோதா நிறைவேற்றப்படும் வரை லோக்பால் அமைப்பிற்கான உறுப்பினர்களை நியமிக்க முடியாது என அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை நிறைவடைந்ததாக கூறிய நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.