வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா  pt
இந்தியா

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா இன்று தாக்கல் ; 12 மணி நேரம் விவாதம்?

மக்களவையில் பிற்பகல் 12.15 மணிக்கு வக்ஃப் மசோதா மீதான விவாதத்தை தொடங்க முடிவு.

PT WEB

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது.

மக்களவையில் பிற்பகல் 12.15 மணிக்கு வக்ஃப் மசோதா மீதான விவாதத்தை தொடங்க அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

மசோதா மீதான விவாதத்திற்கு, குறைந்தபட்சம் 12 மணி நேரம் ஒதுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், மக்களவையில் எட்டு மணி நேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.