இந்தியா

வேளாண் சட்டங்களை எதிர்த்து எதிர்கட்சிகள் அமளி; மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு!

வேளாண் சட்டங்களை எதிர்த்து எதிர்கட்சிகள் அமளி; மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு!

JustinDurai

மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நாளை வரை அவையை ஒத்திவைத்து மக்களவைத் தலைவர் உத்தரவிட்டார்.

நேற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற தொடர் அமளியால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை இன்று (பிப்.3)  பிற்பகல் கூடியது.

மக்களவை கூடிய சிறிது நேரத்தில், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மக்களவையை இரவு 9 மணி வரை ஒத்திவைத்து பேரவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். பின்னர் மீண்டும் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.