இந்தியா

மக்களவைத் தேர்தல்: பீகாரில் பூத் உறுப்பினர்களை அதிகரிக்க பாஜக திட்டம்

மக்களவைத் தேர்தல்: பீகாரில் பூத் உறுப்பினர்களை அதிகரிக்க பாஜக திட்டம்

webteam

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலின்போது பீகார் மாநில வாக்குப்பதிவு மையங்களில் பாஜக உறுப்பினர்களை அதிகரிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று பீகார் மாநில பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது வருகின்ற மக்களவைத் தேர்தலின்போது, பீகாரில் வாக்குப்பதிவு மைய உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார். அப்போது பேசிய அமித்ஷா, பீகாரில் பாஜகவின் வெற்றியை தக்க வைத்துக் கொள்வது குறித்த திட்டங்களை தெரிவித்தார்.

கடந்த முறை மக்களவைத் தேர்தலின்போது பீகாரில் பாஜக கூட்டணி 40 இடங்களில் 31 இடங்களை கைப்பற்றியதாகவும், இந்த முறை அதேபோன்று ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற பாஜக நிர்வாகிகள் தீவிர பணியில் ஈடுபடவேண்டும் என்றும் கூறினார். இதற்காக 40 தொகுதிகளின் வாக்குப்பதிவு மையங்களிலும் பாஜக உறுப்பினர்களை அமர வைக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளை சாமளிப்பதற்கு அது ஏற்றதாக அமையும் என்றும் கூறினார். எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தாலும், தற்போது ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதை அவர் குறிப்பிட்டு பேசினார். அத்துடன் பீகார் மாநில பாஜக நிர்வாகிகள் வாரத்திற்கு இருமுறை ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இதற்காக வரும் நவம்பர் மாதம் பீகாரில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.