தேர்தல்
தேர்தல் முகநூல்
இந்தியா

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதில் சிக்கலா? ஏன் தாமதம்?

PT WEB

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் எழுந்துள்ள நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களவை

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் ஆணையர்கள் நேரில் சென்று ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுடனும் விவாதிக்கப்படுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் வரும் 12 மற்றும் 13ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தவுள்ளனர். இந்த ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் டெல்லி திரும்பிய பின்னரே தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

எனவே தேர்தல் தேதி அறிவிப்பு மேலும் தாமதமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பு மார்ச் 10ஆம் தேதியே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.