தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் ட்விட்டர்
இந்தியா

7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

Prakash J

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, அதற்கான 18வது மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், அதற்கான தேதி அட்டவணை இன்று (மார்ச் 16) இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டைப் போலவே, இந்த தேர்தலும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தலின்போதே தமிழகத்தில் காலியாக அறிவிக்கப்பட்டு உள்ள விளவங்கோடு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அன்றே விளவங்கோடு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

வேட்பு மனு தாக்கல்: மார்ச் 20

வேட்பு மனு கடைசி நாள்: மார்ச் 27

வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 28

வாக்குப் பதிவு: ஏப்ரல் 19

வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4