மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி pt web
இந்தியா

மம்தாவின் ஒரே அறிவிப்பால் சூடுபிடிக்கத் தொடங்கிய அரசியல் களம்! யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்?

Angeshwar G

மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். INDIA கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இருக்கும் நிலையில் மம்தாவின் இந்த அறிவிப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தனித்து போட்டியிடுவோம் என மம்தா அறிவித்திருக்கும் சூழலில், ’மம்தா இல்லாத கூட்டணியை நினைத்துக்கூட பார்க்க முடியாது’ என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மம்தாவின் அறிவிப்பு குறித்து புதிய தலைமுறையிடம் தனது கருத்துக்களை பிரத்யேகமாக பகிர்ந்து கொண்ட பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி, “மம்தா பானர்ஜியின் கோபம் மிகவும் நியாயமான கோபம்” என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் தனது கருத்தை பிரத்யேகமாக பகிர்ந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், “ராகுல் காந்தி நடத்துவது கூட்டணி யாத்திரை அல்ல. காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி நடத்துகிற பிரத்யேக யாத்திரை” என தெரிவித்துள்ளார்.

இந்து என் ராம் இது குறித்து கூறுகையில், “திரிணமூல் காங்கிரஸ் தான் மெயின் ஃபோர்ஸ். பேரம் பேசுகிறார்களா அல்லது இது தான் கடைசி முடிவா என்று கூட சொல்ல முடியாது? இதன் காரணமாக இந்தியா கூட்டணி பலவீனம் அடையும் என்றும் சொல்ல முடியாது?” என தெரிவித்தார்.