இந்தியா

“ஊரடங்கை புத்திசாலித்தனமாக தளர்த்த வேண்டும்” - ரகுராம் ராஜன்

webteam

கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை புத்திசாலித்தனமாக தளர்த்த வேண்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

காணொலி வாயிலாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கொரோனா ஊரடங்கு மற்றும் பொருளாதார நிலை குறித்து ரகுராம் ராஜனிடம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது பேசிய ரகுராம் ராஜன், மக்களை எப்போதும் முடக்கத்திலேயே வைத்திருப்பது எளிது என்றும், ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானதாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவ 65 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். பொது முடக்கத்தை தளர்த்துவதில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், நீண்ட நாட்களுக்கு உணவளிக்கும் திறன் இந்தியாவுக்கு இல்லாததால், நாம் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என யோசனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்டுப்பாடுகளை தளர்த்தும்போது யாராவது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தியிடம் அவர் தெரிவித்துள்ளார்.