இந்தியா

கடனை தள்ளுபடி செய்தால் மட்டும் விவசாயிகள் தற்கொலை நின்றுவிடுமா?

webteam

கடன் தள்ளுபடி நிச்சயமாக விவசாயிகள் தற்கொலையை முடிவுக்கு கொண்டு வராது. அது ஒரு நிரந்தர தீர்வாகவும் அமையாது என்று பாஜக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவின் விதர்பா மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இதற்கு தீர்வு காண விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு கடன் தள்ளுபடி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

இந்த நிலையில் விதர்பா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “கடன் தள்ளுபடி ஓரளவுக்கு நிவாரணமாக அமையலாம். ஆனால் இது நிச்சயமாக விவசாயிகள் தற்கொலையை முடிவுக்கு கொண்டு வராது. மேலும் அது ஒரு நிரந்தர தீர்வாகவும் அமையாது. விதர்பாவில் விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணம் அங்கு சரியான நீர்பாசன வசதி இல்லாததே ஆகும். தற்போது 50 சதவீத விவசாய நிலத்திற்கு நீர்பாசன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது நல்ல முன்னேற்றம். இதன்மூலம் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்” என்று கூறினார்.