திருப்பதியில் பல்லி விழுந்த சாம்பாரை வழங்கிய ஓட்டல் சீல் வைக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஐதராபாத்தை சேர்ந்த லட்சுமி தனது குடும்பத்தினருடன் வந்தார். சுவாமி தரிசனத்திற்கு பிறகு கோயிலுக்கு எதிரே இருக்கும் துரித உணவகத்தில் நேற்று தோசை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, லட்சுமி சாம்பரில் பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, உடனடியாக வாந்தி எடுத்தார். அவரைப் பார்த்து அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் வாந்தி எடுக்க தொடங்கினர்.
இதையடுத்து திருமலையில் உள்ள தேவஸ்தான மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பக்தர்கள் எழுத்து பூர்வமாக புகார் அளித்ததையடுத்து அங்கு வந்த விஜிலன்ஸ் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதற்குள் ஓட்டல் உரிமையாளர் பல்லி விழந்த சாம்பரை கீழே கொட்டி விட்டதால் ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.