இந்தியா

கேரளா: இன்று முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்; மதுக்கடைகள் திறப்பு

கேரளா: இன்று முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்; மதுக்கடைகள் திறப்பு

JustinDurai
கேரளா மாநிலத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது.
 
கொரோனா முழு ஊரடங்கு காரணமாக கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில்  அம்மாநிலத்தில் அமலில் உள்ள தளர்வுகள் அற்ற ஊரடங்கு நேற்றுடன் (புதன்கிழமை) முடிவடைந்தது. இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.  இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. இவை தினசரி காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மது வாங்குவதற்கான ஆன்லைன் முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் மீண்டும் அறிவிக்கப்படும் வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.