இந்தியா

சொன்னா நம்பணும்: ஃபாரின் சரக்கை குடித்தது எலிகள்தான்: பீகார் போலீஸ் திடுக்

webteam

மதுவை இலவசமாக, எந்தத் தடையுமின்றி எலிகள் குடித்துத் தீர்த்ததாக பீகார் போலீஸார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்செய்யப்பட்ட பிறகு ஓராண்டில் 9 லட்சம் லிட்டர் மதுபாட்டில்கள் பறிமுதலானது. பீகார் மாநிலத்தில் உள்ள 1,053 காவல் நிலையங்களில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், காவல் நிலையங்களில் வைக்கப்பட்டு இருந்த அவற்றை காவல்துறையினர் குடித்து காலி செய்ததாகச் சர்ச்சை எழுந்தது. ஆனால், எலிகள் அவற்றைக் குடித்துத் தீர்த்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஐந்து லட்சத்து 67 ஆயிரத்து 857 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள். 3 லட்சத்து 10 ஆயிரத்து 492 லிட்டர் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை.