குஜராத் மாநிலம் கிர் காட்டில் உள்ள சிங்கம் ஒன்று புல்லை உண்ணும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
வேட்டையாடி மட்டுமே உண்ணும் குணாதிசியம் கொண்ட விலங்கான சிங்கம், தாவரங்களை உண்ணும் காட்சி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புலி பசித்தால் புல்லை தின்னாது. ஆனால் சிங்கம் பசித்தால் புல்லை உண்ணுமா என நகைப்புடன் கூடிய கருத்துக்களை நெட்டிசன்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே, அனைத்து விலங்குகளும் தாவரங்களை உண்ணக் கூடியவையே. அசைவ விலங்குகளை பொறுத்தவரை உணவு செரிமானத்திற்காக இது போன்ற புற்களை சாப்பிடுவது வழக்கம். இது இயற்கையான ஒன்றே என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.