குஜராத் அருகே உள்ள 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிங்கத்தை வனத்துறையினரின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர்.
குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் என்ற இடத்தில், வேளாண்மைக்கு பயன்படுத்தப்பட்ட ஆழமான கிணற்றில் சிங்கம் ஒன்று தவறி விழுந்தது. சிறிதளவு மட்டுமே அந்த கிணற்றில் தண்ணீர் இருந்த நிலையில், அந்த சிங்கம் மேலே வர முடியாமல் தவித்தது. தகவல் குறித்து அறிந்ததும், அங்கு வந்த வனத்துறையினர் சிங்கத்தை நீண்ட நேரம் போராடி மீட்டனர்.