இந்தியா

எல்.ஐ.சி. பங்குகளை வாங்க குவியும் விண்ணப்பங்கள்

JustinDurai

எல்.ஐ.சி. பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

எல்.ஐ.சி. நிறுவனத்தின் மூன்றரை சதவிகித பங்குகளை விற்று 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திங்கள்கிழமை விண்ணப்பங்களை ஏற்க தொடங்கியது. நேற்று மாலை வரை, விற்கப்படும் எல்.ஐ.சி. பங்குகளின் எண்ணிக்கையை விட அதிகளவில் பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எல்.ஐ.சி. பங்குகளின் விலையை மத்திய அரசு குறைவான அளவிலேயே நிர்ணயித்துள்ளதால், மே 9ஆம் தேதிக்குள் முழுமையாக விற்று தீர்ந்துவிடும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 60 ரூபாய் வரை தள்ளுபடி எனவும், ஊழியர்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 40 ரூபாய் தள்ளுபடி எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் உற்சாகமாக எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை வாங்க விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாம்: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 600 கிளைகளை மூடுகிறதா?