ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த 7 மாநிலங்களவை எம்.பி.க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று கட்சி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் 3இல் 2 பங்கினர் கட்சித் தாவினால் தகுதி ரத்து செய்யப்படும் என்ற விதியை சுட்டி, சஞ்சய் சிங் மாநிலங்களவை தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த மாற்றம் அரசமைப்புக்கும் சட்டத்திற்கும் விரோதம் என அவர் குற்றம்சாட்டுகிறார்.
தங்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 7 பேரையும் தகுதிநீக்கம் செய்யவேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பான கடிதத்தை மாநிலங்களவை தலைவர் சி. பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் எழுதியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒரு கட்சியிலிருந்து 3இல் 2 பங்கினர் வேறு கட்சிக்கு மாறினாலும் அவர்கள் தகுதியிழப்பர் என்ற விதியை சுட்டிக்காட்டி இக்கடிதத்தை சஞ்சய் சிங் எழுதியுள்ளார். ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணையும் 7 பேரின் முடிவு அரசமைப்புக்கு விரோதமானது, சட்டவிரோதமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து தங்கள் மாநில ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுடன் சென்று குடியரசுத் தலைவரிடம் முறையிட பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் திட்டமிட்டுள்ளார்.