கொரோனாவின் தாக்கம் மக்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வரும் நிலையில் மனம் தளராமல் போராட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் பிராவோ பாடல் தன்னுடைய விழிப்புணர்வு பாடலை மீண்டும் பகிர்ந்துள்ளார்.
கொரோனாவின் கோர தாண்டவத்தில் பல்வேறு நாடுகள் சிக்கியிருந்த போது கடந்த வருடம் தானே பாடி ஒரு பாடலை உருவாக்கியிருந்தார் பிராவோ. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பிராவோ மீண்டும் அந்த பாடலை பகிர்ந்துள்ளார்.