ராஜஸ்தான் மாநிலத்தின் சிவில் சர்வீஸ் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான பாடத் திட்டத்தை திருத்தம் செய்தபோது, பொது அறிவு தேர்வுக்கான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை ராஜஸ்தான் அரசு சேர்த்துள்ளது. நிதி சாஸ்திரா என்ற புதிய பிரிவில் பகவத் கீதை உருவாக்கப்பட்டுள்ளது. நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் பகவத் கீதையின் பங்கு என்ற தலைப்பில் பாடத்திட்டம் உள்ளது. அதாவது, குருஷேத்திர போரில் கிருஷ்ணர், அர்ஜூனன் இடையே உடையாடல் நடைபெறும் 18 அத்தியாயங்களில் இருந்து மேலாண்மை மற்றும் நிர்வாகம் குறித்து கேள்விகள் கேட்கப்படும்.
பகவத் கீதையோடு, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், நிர்வாக அதிகாரிகளின் வாழ்க்கை வரலாறும் சேர்க்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 12ம் தேதி முதல் விண்ணப்பிப்பதற்கான நாள் தொடங்கியுள்ளது. மே 12ம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள். இந்த நிலையில், ராஜஸ்தான் அரசு பாடத் திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.