இந்தியா

ஓரினச்சேர்க்கை திருமணம்...தவறான புகார்...பெற்றோர் அவதி

Rasus

பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி இரண்டு பெண்கள் பெங்களூருவில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்தவர் காயத்ரி மற்றும் சுதா. காயத்ரி அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் படித்துவரும் நிலையில் வீட்டில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்திருக்கின்றனர். ஆனால் இந்த திருமண ஏற்பாட்டில் விருப்பம் இல்லாத காயத்ரி, தான் சுதா என்கிற மற்றொரு பெண்ணை விரும்பவுதாவும் அவரையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வீட்டில் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காயத்ரியும், சுதாவும் அங்குள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்திருக்கின்றனர். இதுகுறித்து பெற்றோர்கள் போலீஸில் புகார் கொடுத்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டனர். ஐபிசி 377 பிரிவின் படி லெஸ்பியன் திருமணம் இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத ஒன்று, இந்த காரணத்தை சொல்லாமல், குறிப்பிட்ட பெண்களின் வீட்டார் இருவருக்கும் மனநிலை சரியில்லை என்று புகார் அளித்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என போலீசார் விளக்கமளித்துள்ளனர்