ஜம்மு நகரில் அமைந்துள்ள கிரீன் பெல்ட் பூங்காவில் மூவரை தாக்கியுள்ளது ஒரு சிறுத்தை. தாக்குதலுக்கு உள்ளனவர்களில் இருவர் வனத்துறையை சேர்ந்த ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.
முதலில் அந்த பகுதியில் இருந்த முதியவரை சிறுத்தை தாக்கியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது வனத்துறை ஊழியர்கள் இருவரை சிறுத்தை தாக்கியுள்ளது. சிறுத்தையில் தாக்குதலில் இருந்து தப்பிக்க தடியால் சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் தாக்கியுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இறுதியில் 40 நிமிட போராட்டத்திற்கு பிறகு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர் வனத்துறை ஊழியர்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.