கர்நாடக சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, எம்எல்ஏக்கள் நிற்காமல் வெளியேறியது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களிள் பதவியேற்புக்கு பின் முதலமைச்சர் எடியூரப்பா மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப் போவதில்லை என்றும் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடைந்ததால் மரபுப்படி தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
ஆனால் அதற்கு மரியாதை செலுத்தாமல் எடியூரப்பா உள்ளிட்ட பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறினார். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ், மதச்சார்ப்பற்ற ஜனதா தள உறுப்பினர்களும் வெளியேறினர். தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, எழுந்து நிற்காமல் சட்டசபையை விட்டு உறுப்பினர்கள் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.