இந்த பல்பு நுரையீரல் பாதையில் சென்று சிக்கியதால் மூச்சுத்திணறலால் சிறுவன் அவதிப்பட்டுள்ளான்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் விளையாடி கொண்டிருந்தபோது விளையாட்டுத்தனமாக எல்.இ.டி பல்பு ஒன்றை விழுங்கிவிட்டான். இந்த பல்பு நுரையீரல் பாதையில் சென்று சிக்கியதால் மூச்சுத்திணறலால் சிறுவன் அவதிப்பட்டுள்ளான்.
இதையடுத்து சிறுவனை அவனது பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அந்த பல்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றினர். தற்போது சிறுவன் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.