தலைமை நீதிபதி பணியிட மாற்றத்தை மறு ஆய்வு செய்ய வழக்கறிஞர்கள், கொலிஜியத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
‘சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை முக்கியத்துவமற்ற இடத்திற்கு பணியிட மாற்றம் செய்வதை மறு ஆய்வு செய்யவேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் 237 பேர் கொலிஜியத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். கொலிஜியம் செப்.16ல் எடுத்த முடிவை நவம்பர் மாதத்தில் அறிவித்தது குறித்தும் கடிதத்தில் வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக செப்டம்பர் 16ல் எடுத்த முடிவின் அடிப்படையில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றவும் கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.
தொடர்புடைய செய்தி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகலயாவுக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை