இந்தியா

2020-ன் கடைசி சந்திர கிரகணம் இன்று! - இந்தியாவில் தெரியுமா?

2020-ன் கடைசி சந்திர கிரகணம் இன்று! - இந்தியாவில் தெரியுமா?

webteam

2020ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. 

சூரியனுக்கும் சந்திரனக்கும் இடையே பூமி வந்து ஒரே நேர்கோட்டியில் இருக்கும் போது பூமியின் நிழலானது சந்திரன் மேல் விழுந்து சந்திரனை மறைக்கும். இந்த நிகழ்வையே சந்திரகிரகணம் எனக் கூறுகிறோம். இந்த ஆண்டு ஜனவரி, ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்கெனவே 3 சந்திர கிரகணங்கள் நிகழ்ந்தன. அதன்படி இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது.

இன்றைய சந்திரகிரகணம் பெனும்பிரல் சந்திரகிரகணமாகும். இது வழக்கமான சந்திரகிரகணத்தை விட அதிக நேரம் நீடிக்கும். இந்தியாவிலும் கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் இது நிகழும். ஆனால் இன்றைய சந்திரகிரகணம் இந்தியாவில் தெரியாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சில இடங்களில் இது தெரிய வாய்ப்புள்ளது. ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக், அட்லாண்டிக் உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாக தெரியும் (Source: timeanddate.com) எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கு இன்றைய சந்திரகிரகணம் கடைசி என்பதால் அடுத்த சந்திரகிரகணம் 2021ம் ஆண்டு மே 26ம் தேதி நடைபெறவுள்ளது.