இந்தியா

மிகப்பெரிய சோலார் மரத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை: எங்கே தெரியுமா?

Sinekadhara

பஞ்சாப் மாநிலத்தில், மிகப்பெரிய சோலார் மரத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கான கவுன்சில் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சேர்ந்து, லூதியானா பகுதியில், மரத்தின் வடிவில், சோலார் பேனல்களை உருவாக்கியுள்ளனர். விவசாய நிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சோலார் மரத்தின் மூலமாக, பம்புகள், மின் டிராக்டர்களை இயக்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த விவசாயப் பயன்பாட்டிற்கு உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.