இந்தியா

பஞ்சாப் பயணத்தின் போது பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு? - உயர்மட்ட விசாரணை குழு அமைப்பு

EllusamyKarthik

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பஞ்சாப் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பில் குறைபாடு இருந்த காரணத்தால் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு தலைநகர் டெல்லி திரும்பினார். இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணை குழு அமைத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். 

இந்த குழுவில் மூன்று நபர்கள் அடங்கியுள்ளனர். அமைச்சரவை செயலக பாதுகாப்புச் செயலாளர் சுதிர் குமார் சக்சேனா, உளவுத்துறையின் இணை இயக்குனர் பல்பிர் சிங், சிறப்பு பாதுகாப்பு குழு ஐ.ஜி சுரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடத்தி அதன் அறிக்கையை விரைந்து சமர்பிக்க இந்த குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.