இந்தியா

இமாச்சலப் பிரதேசம்: ஆற்றின் ஓட்டத்தைத் தடுத்த நிலச்சரிவு – ஆபத்தில் மக்கள்

Veeramani

இமாச்சலப் பிரதேசத்தின் லஹால்-ஸ்பிட்டியில் உள்ள ஜஸ்ரத் கிராமத்திற்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சந்திரபாகா ஆற்றின் ஓட்டம்டைபட்டது.  

இது தொடர்பான தகவல்களை தெரிவித்த லாஹால்-ஸ்பிட்டி துணை ஆணையர் நீரஜ் குமார்,  "காலை 9.30 மணியளவில் சந்திரபாகா ஆற்றில் மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதனால் சுமார் 2,000 மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில் ஆற்றின் ஓட்டம்  முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய நிலைமையை ஆய்வு செய்வதற்கும், சமாளிப்பதற்கும் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். தேசிய பேரிடர் மீட்புப் படையிடம் (NDRF) வான்வழி ஆய்வு மற்றும் இந்த நிலச்சரிவை அகற்றுவதற்கான திட்டத்தை வகுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறினார்.

நிலச்சரிவு மற்றும் மேக வெடிப்பு காரணமாக இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஜூலை 27 அன்று ஏழு பேர் மற்றும் 2 அரசு ஊழியர்கள் உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூர் மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகல் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேருந்துகள் உட்பட ஐந்து வாகனங்கள் புதைந்ததில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர்.