இந்தியா

போட்டோ ஷாப் கூட்டம்: லாலுவின் பேரணி குறித்து நிதிஷ் விமர்சனம்

போட்டோ ஷாப் கூட்டம்: லாலுவின் பேரணி குறித்து நிதிஷ் விமர்சனம்

rajakannan

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மத்திய பாஜக அரசுக்கு எடுத்துரைக்கும் வகையில், பீகார் தலைநகர் பாட்னாவில் லாலு பிரசாத் விடுத்த அழைப்பின் பேரில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தை லாலு பிரசாத் ஏற்பாடு செய்திருந்தார். இதில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா, ஐக்கிய ஜனதா தள அதிருப்தி தலைவர் சரத் யாதவ், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் அலி அன்வர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இவர்கள் தவிர, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா தலைவர் பாபுலால் மராண்டி ,தேசியவாத காங்கிரஸ் மூத்தத் தலைவர் தாரிக் அன்வர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பாட்னா பேரணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு நிதிஷ்குமார் பதில் அளிக்கையில், “பேரணியில் கூட்டம் வந்தது ஒரு விஷயமே அல்ல. கூட்டத்தில் அதிகம் பேர் இருப்பது போன்று போட்டோ ஷாப்பில் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை நான் பார்த்தேன். அது ஒரு குடும்ப நிகழ்ச்சி. என்னை அரசியல் ரீதியாக ஒழித்துக்கட்ட அனைத்துவிதமான முயற்சிகளையும் லாலு செய்து வருகிறார்” என்றார்.