இந்தியா

63 சதவிகித கிட்னி செயலிழப்பு: லாலு பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை

63 சதவிகித கிட்னி செயலிழப்பு: லாலு பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை

webteam

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் கிட்னி 63 சதவிகிதம் செயலிழந்ததை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். சிறையில் இருந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வருடமாக அங்கு சிகிச்சை பெற்று அவருக்கு தற்போது கிட்னி பெரும்பாலும் செயல் இழ்ந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

’லாலுவின் சிறுநீரகம் 63 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. 37 சதவீதம் மட்டுமே செயல்படுகிறது. அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. ரத்தத்தில் நோய்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ரத்த அழுத்தமும் அதிகரித்துள்ளது. அவரது உடல் நிலை சீராக இல்லை’’ என்று அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் டிகே ஜா தெரிவித்துள்ளார். 

இருந்தும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ’அவருக்கு சிறப்பு சிகிச்சை தேவை. அவர் நோய் குணமாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். குடும்பத்தினரும் நலம் விரும்பிகளும் அவர் உடல் நலனில் அக்கறை கொண்டுள்ளோம்’ என்று லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.