ஹரியானா மாநிலம் குருகிராம் என்ற பகுதியில் ஒரு பெண்ணை கிண்டல் செய்த நபரை மற்ற பெண்கள் இணைந்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல், பாலியல் வன்முறைகள் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஹரியானாவில் நேற்றிரவு ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் என்ற பகுதியில் நடந்து செல்லும் பெண்ணை வாலிபர் கிண்டல் செய்ததையடுத்து, அந்த பெண் அவரை தாக்குகிறார். இதனை கண்ட மற்ற பெண்கள் ஒன்றாக இணைந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக அந்த இளைஞனை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.