விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட கும்பமேளா புகைப்படம் புதியதலைமுறை
இந்தியா

நாசா வெளியிட்ட கும்பமேளா புகைப்படங்கள் | விண்வெளியில் இருந்து பிரயாக்ராஜ் காட்சி!

விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட பிரயாக்ராஜில் நடைப்பெற்று வரும் கும்பமேளாவின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

Jayashree A

விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட பிரயாக்ராஜில் நடைப்பெற்று வரும் கும்பமேளாவின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட மகா கும்பமேளாவின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஐஎஸ்எஸ்,(ISS) மணிக்கு 28,000 கிமீ வேகத்திலும், பூமிக்கு மேலே 400 கிமீ உயரத்திலேயும் சுற்றிக்கொண்டு இருக்கிறது., அதில் பொருத்தப்பட்டிருக்கும் உயர் ஆற்றல் கொண்ட கேமராக்களைப் பயன்படுத்தி இந்த மாபெரும் மத நிகழ்வைப் படம்பிடித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா பூமியில் மட்டுமல்லாது விண்வெளியில் இருந்தும் பல கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்த நிகழ்வை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) உள்ள நாசா விண்வெளி வீரரான, டான் பெட்டிட், இந்த படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த படங்களை பெட்டிட், என்பவர் தனது X இல் வெளியிட்டுள்ளார். அதில், "2025 மஹா கும்பமேளா ISS இலிருந்து இரவில்... " என்று எழுதியுள்ளார்.

கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழா 45 நாள் நடைபெறும். இதற்காக 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க உ.பி அரசு ரூ. 400 கோடி முதலீடு செய்ததுள்ளது.