இந்தியா

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது

webteam

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 25 பேர் பதவியேற்றுள்ளனர். 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கடந்த 23ஆம் தேதி பதவியேற்றார். அன்றே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஷ்வர் துணை முதலமைச்சராக பதவியேற்றார். இதன்பிறகு இரு கட்சிகளிடையே அமைச்சரவை அமைப்பதில் பெரும் இழுபறி நடந்தது. பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்த நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார், குமாரசாமி அண்ணன் ரேவண்ணா ஆகியோர்கள் அமைச்சர்களாகி உள்ளனர். சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகி உள்ளார். ரேவண்ணாவிற்கு பொதுப்பணித்துறை வழங்கப்பட்டுள்ளது. சித்தராமைய்யாவை தோற்கடித்த ஜி.டி. தேவே கவுடாவும் அமைச்சராகி உள்ளார்.