இந்தியா

குமாரசாமி முதல்வராக பதவியேற்பார்: குலாம் நபி ஆசாத்

குமாரசாமி முதல்வராக பதவியேற்பார்: குலாம் நபி ஆசாத்

Rasus

எடியூரப்பா பதவி விலகியதால் காங், மஜத கூட்டணி சார்பில் குமாரசாமி முதல்வராக பதவியேற்பார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவையில் இன்று 4 மாலை மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் உருக்கமாக பேசிய எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலே பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தனது முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். பின்னர் கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த அவர் தனது ராஜினாமா கடிதத்தையும் அளித்தார்.

இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், “கர்நாடக அரசியல் விவகாரத்தை சிறப்பாக கையாண்ட நீதித்துறைக்கு எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை என்று ஆளுநருக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் காங்கிரசையும்- மதச்சார்பற்ற ஜனதா தளத்தையும் உடைக்க ஆளுநர் 2 வார கால அவகாசம் வழங்கினார். பணம், பதவி ஆசையைக் காட்டி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க அவர்கள் முற்பட்டனர். எடியூரப்பா பதவி விலகியதால் காங், மஜத கூட்டணி சார்பில் குமாரசாமி முதல்வராக பதவியேற்பார்” என தெரிவித்தார்.