மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவ்வுக்கு உடனடியாக தண்டனை நிறைவேற்றப்படாது என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது கூறுகையில், தூக்குத் தண்டனைக்கு எதிராக குல்பூஷண் ஜாதவ் 60 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஜாதவ் வழக்கில் சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி குல்பூஷன் ஜாதவ்வை கடந்த ஆண்டு பாகிஸ்தான் கைது செய்தது. பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்திய அரசு, ஜாதவ்வுக்கு தண்டனையை நிறைவேற்றினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது, குல்பூஷன் ஜாதவ்வுக்கு உடனடியாக தண்டனை நிறைவேற்றப்படாது என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.