இந்தியா

குல்பூஷண் ஜாதவ் வழக்கு.. இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு

குல்பூஷண் ஜாதவ் வழக்கு.. இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு

Rasus

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர் குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சர்வதேச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கி உள்ளது.

அதாவது, குல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளதால், பாகிஸ்தானால் குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட முடியாது.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் , ஈரானில் இருந்து சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் ஊடுருவி  இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரை அந்நாட்டு ராணுவம் கைது செய்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.