பாம்புபிடி வீரர் சஜூராஜன் கூகுள்
இந்தியா

கேரளா | உதவச் சென்ற இடத்தில் உயிரைவிட்ட பாம்புபிடி வீரர்.. பல உயிர்களை காப்பாற்றியவர் பலியான சோகம்!

ஏரூப் பகுதிக்குள் இருக்கும் வீடுகளில் பாம்புகள் நுழைந்தது என்றால் அவர்கள் தேடுவது சஜூ ராஜைதான். பாம்பு பிடி வீரரான இவர், அப்பகுதியில் தொல்லைக்கொடுக்கும் பாம்புகளைப்பிடித்து அவற்றை பத்திரமான இடங்களுக்கு விடுவதையும் செய்து வந்துள்ளார்.

Jayashree A

கொல்லம்: பாம்பு பிடி வீரம் பாம்பு கடித்து உயிரிழந்தார்

பாம்பென்றால் படையும் நடுங்கும்... எத்தனை பெரிய பலசாலிகளும் பாம்பென்றால் ஒரு அடி பின்னால்தான் செல்வார்கள். கொடிய விஷமுடைய பாம்புகள் மனிதர்கள் புழங்கும் இடத்தில் நுழைந்து விட்டால், அதை பத்திரமாகப்பிடித்து காட்டுக்குள் விடுவதை சிலர் தொழிலாக செய்து வருகின்றனர்.

இவர்களில் ஒருவர்தான் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சஜூ ராஜ். இவர் ஏரூர் சௌமியா பவனில் பாம்புகளை பராமரித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

snake - file image

எரூர் பகுதிக்குள் இருக்கும் வீடுகளில் பாம்புகள் நுழைந்தது என்றால் அவர்கள் தேடுவது சஜூ ராஜைதான். பாம்பு பிடி வீரரான இவர், அப்பகுதியில் தொல்லைக்கொடுக்கும் பாம்புகளைப்பிடித்து அவற்றை பத்திரமான இடங்களுக்கு விடுவதையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி (ஞாயிறு) அன்று எரூர் தேகேவயல் காலனி அருகே ஒரு வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்று அவர்களின் வீட்டில் இருந்த ஒருவரை கடித்துள்ளது. இதனால் பதற்றமடைந்த வீட்டின் உரிமையாளர், உடனடியாக சஜூ ராஜூக்கு போன் செய்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த சஜூ, வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தேடியுள்ளார். வீட்டினுள் பாம்பு கிடைக்காமல் போகவே, அருகில் மண்டியிருந்த புதரில் இருக்குமோ என்ற எண்ணத்தில் அதனை சுத்தம் செய்துள்ளனர். தேடுதலுக்கு பின், நாகப்பாம்பு இருப்பதை கண்டுபிடித்து பிடித்துள்ளார் சஜூ. அதை பிடித்து உரிமையாளரிடம் காட்டியப்பொழுது, எதிர்பாராதவிதமாக சஜூ ராஜை அந்த பாம்பு கடித்துள்ளது.

உடனடியாக கோட்டியத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சஜூவை அழைத்துச் சென்ற போது அவர் உடல்நிலை மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே டிசம்பர் 31 உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

snake - file image

பல கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடித்து பலரின் உயிரை காப்பாற்றிய சஜூ, பாம்பு பிடிக்கும் பொழுது தனது உயிரை இழந்த சம்பவமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்து இருக்கிறது.