மோனோஜித் மிஸ்ரா ndtv
இந்தியா

கொல்கத்தா சட்ட மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. போலீஸாரின் அறிக்கையில் பகீர் தகவல்!

தெற்கு கொல்கத்தாவில் உள்ள சட்ட மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக போலீஸாரின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prakash J

தெற்கு கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் 24 வயது சட்ட மாணவி ஒருவர், கடந்த ஜூன் 25ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக போலீஸாரின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் 24 வயது சட்ட மாணவி ஒருவர், கடந்த ஜூன் 25ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் மாணவர் மோனோஜித் மிஸ்ரா (31), தற்போதைய மாணவர்கள் புரோமித் முகர்ஜி மற்றும் ஜைத் அகமது மற்றும் பாதுகாவலர் ஒருவர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பெண்ணின் மருத்துவப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக உறுதியாகியுள்ளது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவரின் டி.என்.ஏ தடயவியல் மாதிரிகளுடன் பொருந்தியுள்ளது என்று போலீசார் குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.

மோனோஜித் மிஸ்ரா

போலீஸார் தாக்கல் செய்துள்ள 650 பக்க குற்றப்பத்திரிகையில், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்படும் முதன்மை நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் பல வீடியோக்களை உருவாக்கி, அதைப் பயன்படுத்தி அவரை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், பாதிக்கப்பட்டவரின் பல ஆபாச வீடியோக்கள் இதர குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் மொபைல் போன்களில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும், இந்த வீடியோக்கள் சுவரில் பொருத்தப்பட்ட வெளியேற்ற மின்விசிறியின் துளையிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வீடியோக்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் குரல்கள் இருப்பதாகவும், அவை, பொருந்திப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் குறித்து போலீசாருக்கோ அல்லது அருகிலுள்ள எவருக்கோ தெரிவிக்காமல், பாதுகாவலர் அறையைப் பூட்டிவிட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதுகாவலரும் ஒரு குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளார்.