”கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தினமும் 100 விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
கொல்கத்தாவில் விமான நிலையத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த அவர், கொல்கத்தா விமான நிலையம் சர்வதேச விமானங்களின் முக்கிய மையமாக மாற்றப்படும் என்று கூறினார்.
தற்போது தினமும் 15 சர்வதேச விமானங்களும் 49 உள்நாட்டு விமானங்களும் இந்த விமான நிலையத்திலிருந்து இயக்கப்படுவதாகவும், மத்திய அரசின் முயற்சிகளாலும், மாநில அரசின் ஒத்துழைப்பாலும் கொல்கத்தா விமான நிலையத்தை இடைநிறுத்தமாகப் பயன்படுத்தும் விமானங்களின் எண்ணிக்கை 264இல் இருந்து 400 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொல்கத்தா விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணியர் எண்ணிக்கையை ஆண்டுக்கு 26 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்தும் திட்டம் இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறினார்.