இந்தியா

நிவாரண முகாமில் தூங்கிய மத்திய இணை அமைச்சர்

நிவாரண முகாமில் தூங்கிய மத்திய இணை அமைச்சர்

webteam

கேரள நிவாரண முகாமில் மத்திய இணை அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் உறங்கிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர். 

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுடன் மத்திய இணை அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் நேற்று செங்கனச்சேரி நிவாரண முகாமில் உறங்கியுள்ளார். கேரள வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக களத்தில் இருந்து தொடர்ந்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு வந்த நிலையில், முகாமில் தூங்கிய தனது புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

தாம் நிவாரண முகாமில் தூங்கியதாகவும், எதிர்காலத்தை எண்ணி பலர் தூங்காமல் விழித்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் அல்போன்சின் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் பலர் கிண்டலடித்து கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.