இந்தியா

 “அதிமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்” - கிருஷ்ணசாமி 

 “அதிமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்” - கிருஷ்ணசாமி 

webteam

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக - பாஜகவுடன் கூட்டணியில் இருந்த நிலையில் கிருஷ்ணசாமி இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுகவை நம்பி நாங்கள் ஏமாந்து போய்விட்டோம். சில கோரிக்கைகளை முன்வைத்து கூட்டணி வைத்தோம். தற்போது அது நிறவேறவில்லை. 

2011 ஆம் ஆண்டிற்கு முன்பாக 2010 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இல்லாத போது அதிமுகவினர் பெரும்பாலானோர் திமுகவுக்கு மாறிக்கொண்டிருந்தனர். அப்போது கூட நாங்கள் ஜெயலலிதாவை சந்தித்து பேசினோம். 

அவருக்கு ஆதரவு தெரிவித்தோம். சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாக செய்கிறேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் செய்யவில்லை. அதன்பின் சங்கரன்கோயில் இடைத்தேர்தலிலும் வாக்குறுதி கொடுத்தார். அதிமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம். அதனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.