மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பயணம் செய்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக வயலில் தரையிறக்கப்பட்டது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கவுகாத்தியில் இருந்து அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சிரோ என்ற இடத்திற்கு மி-17 ரக ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். இந்த ஹெலிகாப்டரில் 7 பயணிகளும், ஊழியர்களும் உடன் சென்றனர். அப்போது, கனமழை மற்றும் பனிமூட்டத்தால் வானிலை மிகவும் மோசமடைந்தது. இதனால், அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர், இடாநகர் அருகே உள்ள வயல்வெளியில் அவசர அவசரமாக தயைிரக்கப்பட்டது.
இதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரிஜிஜூ, தான் மிகவும் அதிர்ச்ஷ்டசாலி என்றும், ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிரக்கிய, அனுபவம் வாய்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை விமானிகளுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்தார். மேலும், விமானிகள் திறமையாகச் செயல்பட்டு ஹெலிகாப்டரை தரையிறக்கியதால் அதில் பயணித்த அனைவரும் உயிர்தப்பியதாகத் தெரிவித்தார்.