தான் பதவி விலகி விட்டதாக பரவும் செய்தி வதந்தி என்றும், புதுச்சேரி மக்களை வெகுவாக நேசிப்பதாக ஆளுநர் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.
விழா ஒன்றில் பங்கேற்பதற்காக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி டெல்லி சென்றுள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களின் செய்தி பரவின. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள கிரண்பேடி, நான் பதவி விலகியதாக யார் வதந்தி பரப்புகின்றனர் எனத்தெரியவில்லை என்றும் பதவி விலகவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரியையும், மக்களையும் வெகுவாக நேசிப்பதாகவும், அச்சமின்றி பணிபுரிவேன் என்றும் கூறியுள்ளார்.