இந்தியா

சுகாதாரத்தில் தமிழகம் 3ஆவது இடம்: முதலிடத்தில் கேரளா

சுகாதாரத்தில் தமிழகம் 3ஆவது இடம்: முதலிடத்தில் கேரளா

rajakannan

இந்தியாவில் ஆரோக்கியம் மிகுந்தவர்கள் உள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. கேரளா முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் இறப்பு விகிதம்,‌ தடுப்பு ஊசி நடவடிக்கை, முறையான பிரசவம், ஹை‌ச்.ஐ.வி. சிகிச்சை உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் இந்த ஆய்வை நிதி ஆயோக் நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு நடத்தப்பட்டடது. அதன்முடிவில் சுகாதாரமான பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் இரண்டாவது ‌இடத்தில் உள்ளது. தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

உத்தரபிரதேஷ், ராஜஸ்தான், பீகார், ஒடிசா மாநிலங்களில் சுகாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சுகாதாரமான சிறிய மாநிலங்களில் மிசோரம் முதலிடத்திலும், மணிப்பூர் இ‌ரண்டாவது இடத்திலும் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவித்துள்ளது. யூனியன் பிரதேசத்தில் லட்சத்தீவு முதலிடம் பிடித்துள்ளது.