செய்தியாளர்: சுமன்
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிராயின்கீழ் பகுதி அருகே உள்ள ஒரு குடோனில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிராயின் கீழ் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்
அப்போது அங்கு சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த சிராயின்கீழ் போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தண்ணீர் கேன் விற்பனைக்காக குடோனை வாடகைக்கு எடுத்து அதில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்துள்ளனர்.
இதையடுத்து திருவனந்தபுரம், கொல்லம் பகுதிகளில் புகையிலை பொருட்களை சப்ளை செய்ததும் தெரியவந்தது. மேலும் புகையிலை விற்பனையில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.