இந்தியா

கேரளா: ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக் கட்டணம் குறைப்பு

கேரளா: ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக் கட்டணம் குறைப்பு

jagadeesh

கேரளாவில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக் கட்டணம் 500 ரூபாயாக குறைக்கப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர்,தனியார் மருத்துவமனைகளில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஆயிரத்து 700 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 500 ரூபாயாக குறைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.