கேரள அரசியலில் புயலை கிளப்பி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னாவுடன் பாதுக்காப்பு பணியிலிருந்த ஆறு காவலர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
நெஞ்சு வலி காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஸ்வப்னா. அப்போது அவரது பாதுகாப்பிற்காக உடன் சென்ற காவலர்கள் செல்ஃபி எடுத்துள்ளனர்.
அதோடு காவலர்கள் அல்லது பணியிலிருந்து செவிலியர் ஒருவரது போனை பயன்படுத்தி ஸ்வப்னா வெளியில் உள்ள நபர்களோடு பேசியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளன.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூப்பிக்கப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்வப்னா செல்போனில் பேசியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.